Jun 8, 2012

டோனி சகுனியா??
ஏன் இப்படியொரு சந்தேகம் வந்துச்சு? மனசுல தோணுச்சு, அதனால வந்துச்சுன்னு பதில் சொல்ல முடியாது.. ரெண்டு வருஷமா, தோனியோட ஸ்டைலைப் பார்க்கிறவங்க மனசுல தோணுற கேள்விதான் இது..

2007 ட்வென்டி - ட்வென்டி வேர்ல்ட் கப் ஜெயிக்கறப்போ, 2011 வேர்ல்ட்கப் ஜெயிக்கறப்போ எல்லாம் இந்த கேள்வி தோணலையா? இப்படியும் சிலர் கேட்கலாம்.. எப்பவுமே, இந்த கேள்வி இருந்துட்டுதான் இருக்கு..

அதை வெளிச்சம் போட்டு காட்டுன பெருமை, அண்ணன் கபில்தேவுக்கு சேரும்.. வேர்ல்ட்கப் ஜெயிச்ச பெருமையோட, இங்கிலாந்துக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் போய் அடிவாங்கினதை யாரும் மறக்க மாட்டாங்க.. இடையில வெஸ்ட் இண்டீஸ் போனப்பவும், கடைசி டெஸ்ட் மேட்ச்ல ஜெயிக்க முயற்சி பண்ணலை டீம் இந்தியா. அப்போ டோனி சொன்ன பதில், அப்படி ஜெயிக்க முயற்சி பண்ணி, விக்கெட் காலி ஆயிருந்தா, என்னைத் தான் விமர்சனம் பண்ணுவாங்க..

புதுசு புதுசா முயற்சி பண்றது, வியூகம் வகுக்கறது, அமைதியா, நிதானமா வெற்றிகளைப் பெறுவது.. இப்படிப் பல சாதனைகளை நம்ம மனசுல நிகழ்த்துன டோனியா, இப்படிப் பேசுனது.. யாராலயும் நம்ப முடியலை..

முடிவெடுக்குற குணத்துல கொஞ்சம் முன்னபின்ன இருக்கலாம்.. அதுக்கும் சகுனியா மாறுறதுக்கும் என்ன சம்பந்தம்?? இருக்கு யுவர் ஆனர்.. அங்கதான் டோனி நிக்குறார்..முதல்ல 2011 வெஸ்ட் இண்டீஸ் டூருக்கு, ஒருநாள் கிரிக்கெட் அணி தலைவரா சுரேஷ் ரெய்னாவை சிபாரிசு பண்ணதுதான் அவரோட புத்திசாலித்தனத்துக்கு, சாரி.. சகுனித்தனத்துக்கு உதாரணம்.. சேவாக், டெண்டுல்கர், டோனிக்கு ரெஸ்ட். ஓகே. அப்போ யுவராஜ்சிங் இருப்பாரே.. காம்பிர் இருப்பாரே.. அப்போ காம்பிருக்கு கேப்டன் பதவி கொடுத்தாங்க.. ஐபிஎல்ல ஷாருக்கான் க்ரூப் அவர் பெண்ட்டை கழட்டுனதுல, அவர் அன்பிட்னு சர்ட்டிபிகேட் கொடுத்தார். உடனே, ரெய்னாவை கேப்டனா ஆக்கிட்டாங்க..

யுவராஜ்சிங் என்னை கேப்டனா ஆக்குங்கன்னு சொல்றாரு பல வருஷமா.. அவரை அவுட் பண்ண, ரெய்னாதான் சரியான சாய்ஸ்.. டோனியோட முடிவு வீண் போகலை. 3-2னு ஒன்டே சீரிஸ் வின் பண்ணாங்க.. ஆனா, காம்பிர், யுவராஜ்சிங் கனவை பணால் ஆக்கிட்டாங்க..

அப்புறம் வெஸ்ட் இண்டீஸ் இங்க வந்தப்போ 4-1 அப்படின்னு இந்தியா ஜெயிச்சது. அப்போ கேப்டனா இருந்தவர் காம்பிர். ஓகே..

புதுசுபுதுசா கேப்டன் வர்றது நல்லதுதானேன்னு நினைக்கலாம்.. அங்கயும் செக் வச்சார் டோனி.. சேவாக், காம்பிர், யுவராஜ்னு டோனி சீட்டுக்கு வேட்டுவைக்க வரிசை கட்டி நிக்கறப்போ, விராத் கோஹ்லியை துணை கேப்டனா அறிவிச்சிருக்காங்க.. அவங்க மூணு பேருக்கும் வேட்டு.. அப்படியே கோஹ்லிக்கும் வேட்டு.. அது எப்படின்னு கேட்கறீங்களா??

கோஹ்லி நல்லா விளையாடுறாரா? இந்தியன் டீம்ல யார் நல்லா விளையாடினாலும், கேப்டன் பதவி கொடுத்தா டக்அவுட் ஆயிடுவாங்க.. தவிர, சச்சின் சாதனையை முறியடிப்பார் கோஹ்லின்னு ஒரு நியூஸ் வருது.. அப்போ அவர் கேப்டனா ஜெயிப்பாரான்னு ஒருசென்டிமெண்ட் வருமே.. அதனாலயும் இருக்கலாம்..இதுபோக, தன்னோட விக்கெட் கீப்பர் பதவி பறிபோகாம இருக்கறதுக்காக, டோனி பண்ற அழிச்சாட்டியம் இருக்கே.. ஐயோ ராமா! அப்படின்னு கத்தத் தோணும்..

விருத்திமான் சாஹா, பார்த்திவ் பட்டேல், தினேஷ் கார்த்திக்.. இவங்களை டீம்ல எடுத்தாலும், விளையாட விடமாட்டாரு தோனி.. அதுவும் தினேஷ் கார்த்திக்தான் எதிர்கால கேப்டன்னு நம்மாளு க்ரேக் சேப்பல் எந்த நேரத்துல சொன்னாரோ தெரியலை.. அப்போ டோனிக்கும் தினேஷூக்கும் மறைமுகப் போட்டி.. அந்த போட்டி இருக்கவே கூடாதுன்னு, அங்கயும் வச்சாரு ஒரு செக் அண்ட் மேட்.. இப்போவரை, தினேஷ் ரஞ்சிட்ராபி விளையாடினாலும், ஐபிஎல் விளையாடினாலும்.. இந்திய அணிக்காக விளையாடுறது மட்டும் கனவுல கூட நடக்காது..

டி20 போட்டிகள்ல ஜோகிந்தர் சர்மா, ராபின் உத்தப்பா மாதிரியான ஆட்களை தொடர்ந்து பாதுகாத்துவச்சதும்.. அப்புறம் பார்ம் சரியில்லாம அவங்க தன்னால வெளியேறுனதும் நாம ஏற்கனவே தெரிஞ்சதுதான்..

அப்புறம் டெஸ்ட் கிரிக்கெட் பத்தி சொல்லணும்.. டிராவிட்டுக்குப் பிறகு, கும்ப்ளே கேப்டனா இருந்தப்போ.. இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்ல நிமிர்ந்தது.. அப்போ டோனிகிட்ட எப்போ டெஸ்ட் போட்டிக்கான கேப்டனா ஆகப்போறீங்கன்னு ஒரு கேள்வி கேட்டாங்க.. அதுக்கு டோனி சொன்ன பதில்.. இன்னும் நான் டெஸ்ட் போட்டி கேப்டனா செயல்பட முடியும்னு தேர்வுக்குழு நம்பலை.. அப்படின்னு சொன்னார்.. தன்மானச்சிங்கம் கும்ப்ளே அப்புறம் அவரோட ஓய்வு முடிவை அறிவிச்சார்.. ஆனா இப்போ இருக்குற நிலைமை என்ன??

கபில்தேவ், அசாருதீன் தொடர்ந்து நம்ம குப்புசாமி (நல்லி இல்லீங்க) வரைக்கும், புதிய கேப்டன் டெஸ்ட் அணிக்கு தேவைன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க.. ஆனா நடந்ததா? இல்லையே..

காம்பீர், சேவக், யுவராஜ்னு ஒரு குரூப் கேப்டனாக தயாரா இருக்கு.. ஆனா, நம்மாளு அந்த டெஸ்ட் போட்டி கேப்டன்ஷிப்பை தக்கவைக்கத்தான், கோஹ்லிய பகடைக்காயா யூஸ் பண்றாரு.. சரி.. இதோட முடிவு என்ன??

தெரியலை.. 2007 டி 20 ல ரிஸ்க் எடுத்தாரு.. உலகக்கோப்பை 2011ல ரிஸ்க் எடுத்தாரு.. அப்புறம் ரஸ்க் சாப்பிட்டாரு.. குஸ்கா சாப்பிட்டாருன்னு சொல்வாங்க.. வெஸ்ட்இண்டீஸ், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா பயணத்திற்குப் பிறகு.. டோனி என்ன செஞ்சார்.. டாக்காவுல நடந்த ஆசியக்கோப்பைல, கையச் சுட்டுக்கிட்டார்.. அப்புறம் ஐபிஎல்ல, ப்ளேஆஃப் அதிர்ஷ்டம் அடிச்சு.. பைனல் வரைக்கும் வந்தார்.. நல்லா சிக்ஸர் அடிச்சார்.. எல்லாம் ஓகே.. ஆனா, எப்பவுமே ஒரு சூதாட்டத்தன்மை அவரோட ஆட்டத்துல தென்படுறதை, யாருமே கவனிக்கலையே. அது ஏன்?

தோற்கிறதுக்காக சூதாட்டம் ஆடுறவங்க, ஜெயிக்கிறதுக்காகவும் ஆடுவாங்க.. அப்படின்னு எங்கூரு பாட்டிக்கும் தெரியும்.. இந்த சர்ச்சைகள்ல இருந்து விடுபட.. இப்போ கவுரவ லெப்டினன்டா, காஷ்மீர் எல்லையில நின்னு போஸ் கொடுக்கிறார்.. ஓகே.. அது அவரோட பெர்சனல் ப்ளஸ் ப்ரபொஷனல் விஷயம்.. ஆனா, நம்ம கேள்விகளுக்கு பதில் சொல்லாம, அரசியல்வாதிகள் மாதிரி பிரச்னையத் திசைதிருப்ப இதெல்லாம் பண்றாரோங்கறதுதான் நம்ம முன்னால இருக்கிற பிரச்னையே..ஓகே.. சரி.. முடிவா என்ன சொல்ல வர்றீங்கன்னு கேட்கலாம்.. டோனி எந்த அளவுக்கு அவரை நம்பி ரிஸ்க் எடுக்காரோ அதே மாதிரி, சில வீரர்களை அவங்களை நம்பி ரிஸ்க் எடுக்க விட மாட்டேங்கிறார்ங்கறதுதான் நிஜம்.. ஒவ்வொரு முறையும் அணித்தேர்வு நடந்து முடியறப்போ, விளையாடமலே ஓரங்கட்டப்படுற வீரர்களோட எண்ணிக்கையும் ரொம்ப அதிகம்.. அதே மாதிரி போட்டிகள்ல சதம் அடிச்சும், அடுத்த மேட்ச்சுக்கு ஆடாமலே இருக்கிறவங்களும் அதிகம்.. கவாஸ்கர் காலத்துல வருஷத்துல பத்து டெஸ்ட் மேட்ச் விளையாடினாலே அதிகம். அப்போ பிட்னஸ், தகுதி, திறமை, தொடர்ந்த விளையாட்டுத்திறன் மாதிரி பிரச்னைகள் வரலாம்..

ஆனா,இப்போ நிலைமை மாறிடுச்சு.. ஒவ்வொரு ஆட்டமுறைக்கும் வெவ்வேறு கேப்டன், வீரர்கள்னு யோசிக்க ஆரம்பிச்சிட்டாங்க.. இப்பவும் தனக்கு வேண்டியவங்களை எல்லா ஆட்டத்துக்கும் வேணும்னு எதிர்பார்க்கிறதும், வேண்டாதவங்களோட திறமையை நிரூபிக்காமலே ஓரங்கட்டுறதும் நடக்காத விஷயம்.. அப்படி மீறி நடந்தா.. டோனி சகுனிங்கறதை நீங்களும் ஒத்துக்குங்க..
No comments: